2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திறந்து வைக்கப்படாத குடி தண்ணீர் திட்டம்

Freelancer   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள விசுவமடு பொதுச் சந்தையில் 2021 ஆம் ஆண்டு வட மாகாண சபையின் PSDG நிதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடி தண்ணீர் திட்டம் நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாத நிலையில்  காணப்படுகின்றது.

விசுவமடு பொதுச் சந்தையின் குடிதண்ணீர் தேவையினை பூர்த்தி செய்துகொள்வதற்கு  1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த குடிதண்ணீர் திட்டம் அமைக்கப்பட்டது.

தற்போதும் சந்தை வணிகர்கள் குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இந்நிலையில் கட்டப்பட்ட குடிதண்ணீர் திட்டத்தை விரைவில் திறந்துவைக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X