Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பரவல் சூழலில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்று, பாரிய அளவில் நிகழ்வுகளையோ, போராட்டங்களையோ மேற்கொள்வதைத் தவிர்த்துள்ளோம் எனத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த நிலையில் தெற்கில் பிரம்மாண்டமாக பெரஹர நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது எனவும் கூறினார்.
ஆகவே, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்புக்கு காரணம், தற்போதுள்ள அரசாங்கமே எனவும், அவர் கூறினார்.
முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218ஆம் ஆண்டு வெற்றி நாள், இன்று (25), முல்லைத்தீவில் உள்ள் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று அசாதாரண நிலை நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ளதாலும், நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாலும் சிறப்பான முறையில் இந்த வெற்றிநாளினை நினைவுகூர முடியவில்லை எனவும் எனவே, இந்த வெற்றிநாளை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தனது மக்கள் தொடர்பகத்தில் நினைவுகூர்கின்றோம் எனவும் கூறினார்.
முல்லைத்தீவு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவிரன் பண்டாரவன்னியன் சிலையை அண்மித்த பகுதிகளில், அதிகளவில் இராணுவமும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் சூழ்ந்திருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது என்றும், ரவிகரன் தெரிவித்தார்.
'இந்த கொரோனா காலப் பகுதியில், மக்களின் உயிரிழப்புக்கள் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன. இத்தகைய பதற்றமானதொரு சூழலில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்று செயற்பட வேண்டிய கடப்பாடுகள் அனைவருக்கும் உள்ளது. அவ்வாறே சுகாதாரத் தரப்பின் அறிவுறுத்தல்களை பலரும் பின்பற்றி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த விடயத்திலே கட்டளைகளைப் பிறப்பிக்கின்ற இடத்தில் இருந்துகொண்டு செயற்படுபவர்கள் தென்னிலங்கையிலே சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது குறைவாகக் காணப்படுகின்றது' என்றும், அவர் தெரிவித்தார்.
'இந்த நிலையில் தற்போது நாம் சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்று, பாரிய நிகழ்வுகளை மேற்கொள்வதையோ, பாரிய போராட்டங்களை மேற்கொள்வதையோ தவிர்த்திருக்கின்றோம்.
ஆனால், தெற்கிலே பெரஹர நிகழ்வை பகிரங்கமாக மேற்கொள்கின்றனர். இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் அரசாங்கமே தவிர வேறு யாரும் இல்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .