2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றத்தில் மீன் ஏல விற்பனை

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முல்லைத்தீவு, நாயாறு கடற்பரப்பில், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 396 கிலோகிராம் மீன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வைத்து ஏல விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன்மூலம் பெறப்பட்ட 2 இலட்சத்து 97ஆயிரத்து 500 ரூபாய் வருமானம், அரசுடமையாக்கப்பட்டது.

முல்லைத்தீவின் நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி, புதன்கிழமை (22) மீன்பிடித்துக்கொண்டிருந்த உள்ளூர்  மீனவர்கள் 10 பேரை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளும் கடற்படையினரும் இணைந்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.எம்.சம்சூதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, ஆறு மீனவர்களுக்கு தலா 4,000 ரூபாய் அபராதமும் மேலும் நான்கு மீனவர்களுக்கு தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், குறித்த மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், உரிமைக்கோரிக்கை விசாரணைக்காக, ஏப்பரல் மாதம் 06ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .