Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டத்துக்கு பல்வேறு மட்டங்களில் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு, தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு, தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வியாழக்கிழமை (23) ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிக்குளம் மக்களின் உரிமை போராட்டத்துக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர் தமது ஆதரவை வழங்கி வருவதோடு, அப்பகுதியில் உள்ள முஸ்ஸிம் மக்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
குறித்த போராட்டத்துக்கு, பொது அமைப்புக்கள், அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனினும், தமது போராட்டம் குறித்து முசலி பிரதேசச் செயலாளர் மற்றும் உதவி பிரதேசச் செயலாளர் ஆகியோர் வந்து பார்வையிட்டுச் சென்னறதை தவிர, எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் காரணமாக வடக்கின் பல்வேறு பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
“போராட்டத்தை மேற்கொண்டே எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதால், நிலம் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும். உரிய பதில் கிடைக்காது விட்டால், சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago