2025 ஜூலை 12, சனிக்கிழமை

நீரின் வேகம் குறையும்

George   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்துக்கு அமைவாக,  மன்னார் நகர பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கியில் திருத்த வேலை நடைபெறுவதனால், நீர் வழங்கலில் போது, நீரின் வேகம் குறைந்த நிலையில் காணப்படும் என, மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எழுத்தூர் மற்றும் பள்ளிமுனை நீர்த்தாங்கிகளில் இருந்து, நீர்விநியோகத்தை மேற்கொள்ளப்பட வேண்டியதன் காரணமாக, 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகத்தின்  வேகம்  மன்னார் நகரப்பகுதியில் குறைவாக காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்றாக பாதிக்கப்படுகின்ற பாவனையாளர்களுக்கு, பௌசர்  மூலம் குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அச்சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .