2025 ஜூலை 12, சனிக்கிழமை

நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை

George   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

“தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலங்களை விடுவிக்க, துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம்  தெரிவித்தார்.

ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கொழும்பில், இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக, மீள் குடியயேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், அலைபேசியூடாக தெரிவித்ததாக, மாவட்டச் செயலாளர் கூறினார்.

எனினும், தமது காணிகளுக்கு செல்லும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.

தனக்கு உத்தியோகபூர்வமாக கிடைத்த தகவலை தான் தெரிவித்து விட்டதாக கூறிய மாவட்டச் செயலாளர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .