2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’நடமாடும் வர்த்தக நிலையங்கள் ஊடாக நடமாட்டத்தை குறைக்கலாம்’

Niroshini   / 2021 மே 11 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்குமென,  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், நேற்று  (10) நடைபெற்ற கொரோனா  தடுப்பு விசேட கலந்துரையாடலின்  பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்பொழுது நிலவி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தமது மாவட்டத்தில் ஏதாவது ஒரு பிரதேசம் முடக்கப்படும் சந்தர்ப்பத்தில், அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறான சூழ்நிலை ஏற்படுகின்றபோது, மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கக்கூடிய வகையில் கூட்டுறவு சங்கங்கள், சதோச, வர்த்தக சங்கங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், அத்துடன் மக்களுக்கு நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக, கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கு முடியுமான சூழல் இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் எடுக்கப்படும் பிசிஆர் மாதிரிகளை, பரிசோதனைகளுக்;காக யாழ்ப்பாணத்துக்கே அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், தற்போதைய  சூழலில் அதிகளவான பிசிஆர் பதிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால், தேக்க நிலை காணப்படுவதாகவும் கூறினார்.

இந்நிலையில், பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை தற்பொழுது காணப்படுவதாகவும், ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X