Niroshini / 2021 ஜூலை 22 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் மேற்கொள்ளும் நடவடிக்கையில் வேகம் போதாது என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் கூறினார்.
சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டசெயலகத்துக்கு முன்பாக, இன்று (22) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கக்கூடிய விதத்திலே நிர்வாகக் கட்டமைப்பை இந்த அரசாங்கம் பேண வேண்டுமென்றார்.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என்றும், ரவிகரன் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago