Editorial / 2022 மே 06 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}


க. அகரன்
அரசாங்தக்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (06) காலை 10 மணிக்கு ஆரம்பித்த பேரணி, கொரப்பத்தான் வழியூடாக சென்று கடைவீதிக்குச் சென்று, ஏ9 வீதியை அடைந்து பழைய பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்திருந்தது.
குறித்த பேரணியில் ஆசிரியர், மின்சார சபை, தபால் ஊழியர், வங்கி ஊழியர், உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களின் தொழிற்சங்கங்களும் பங்கேற்றிருந்தனர். வவுனியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை வவுனியாவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் பாம்புகள் மற்றும் குரங்குகளுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.




6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago