Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 21 , மு.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - மன்னார் வீதி, ஹொறவப்பொத்தான வீதி ஆகியவற்றில் நடைபாதைகளில் அமர்ந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, நிலத்தில் வைத்து மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டது.
வவுனியா நகர்ப்பகுதியில், சுகாதார திணைக்களத்தினரால் பல்வேறு நடவடிக்கைகள், நேற்று (20) முன்னெடுக்கப்பட்டன.
இதில், பொதுசுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், பொலிஸார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக, வவுனியா - மன்னார் வீதி, ஹொறவப்பொத்தான வீதி ஆகியவற்றில் நடைபாதைகளில் அமர்ந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களிடம் விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே, இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.
அத்துடன், கொரனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முறைகள் தொடர்பாக வியாபாரிகளிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், மரக்கறிகளை உயரமான இடத்தில் வைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
16 May 2025