2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘நெற்பயிர்ச் செய்கை அழியும் அபாயம்’

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - அக்கராயன்குளத்தில் இருந்து குறைந்தளவு நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, இருபது ஏக்கர் வரையான நெற்பயிர்ச் செய்கை அழிவை எதிர்கொண்டுள்ளதாகவும் நீரை வயல் நிலங்களுக்கு பாய்ச்சுவதில் விவசாயிகளுக்கிடையே தகராறு தொடர்வதாகவும், அப்பகுதி விசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“அக்கராயன் குளத்தின் கீழ் 1,186 ஏக்கரில் சிறுபோகம் மேற்கொள்வதென, சிறுபோகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், 300 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் கூடுதல் விதைப்பில் நேர்மையற்ற விவசாயிகள் ஈடுபட்டு இருப்பதன் காரணமாக, நீர் விநியோகம் நெருக்கடியை எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

“மேலும், குளத்தில் உள்ள நீரை 40 நாட்கள் வரை விநியோகம் மேற்கொள்ள வேண்டிய நிலையில், குளத்தில் இருந்து குறைவான அளவில் நீரை திறந்துவிடப்படுவதால், அந்நீரை சில விவசாயிகள் நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியாத காரணத்தால், இதுவரை இருபது ஏக்கர் வரையான நெற்பயிர் கருகி வருகிறது” எனவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .