Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லையென நோயாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவு நாளும் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக அவை நிறுத்தப்பட்டுவிட்டதெனக் கவலை தெரிவிக்கும் நோயாளர்கள், அக்கராயன் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பல கிராமங்களை கொண்ட பிரதேசம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுதொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் குமாரவேலிடம் வினவிய போது, அக்கராயன் மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் உணவு கோரும் நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் இதுவரை காலமும் சிற்றூழியர்களே உணவு சமைத்து வந்தனர். கடந்த சில தினங்களாக சமைப்பதனை நிறுத்திவிட்டனர். இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago