2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாடசாலைக்குச் செல்லாத 21 சிறுவர்களை நீதவானிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் பாடசாலைக்குச் செல்லாத 21 சிறுவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிடிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசாவின் ஆலோசனைக்கமைய, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் செயற்படுத்தலுக்கமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. 

கிளிநொச்சிப் பொலிஸாரும் இதில் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். சாந்தபுரம் மற்றும் அம்பாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்துள்ளனர். 

இந்தத் விடயத்தை அறிந்த மாவட்டச் செயலாளர், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து, நீதிவானுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

18 சிறுவர்களும், 3 சிறுமிகளும் இதன்போது பிடிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் சிறுவர்கள் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .