Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபட்டு வரும் வாகனங்கள் தொடர்பில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார், அதிக கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு மாதாந்த தவணைக்கட்டண அடிப்படையில் மாணவர்களை ஏற்றி இறக்கும் சேவையில் முச்சக்கரவண்டி மற்றும் ஹயஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எனினும், சில முச்சக்கரவண்டி சாரதிகள், தமது முச்சக்கர வண்டியில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி சேவையில் ஈடுபடுவதாகவும் அதி வேகத்தில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியில் 4 முதல் 6 வரையிலான சிறுவர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எனவே, சிறவர்களையும், மாணவர்களையும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக பாடசாலை சேவையில் ஈடுபட்டு வரும் முச்சக்கசவண்டி மற்றும் ஹயஸ் வாகன உரிமையாளர்களுக்கு இச்சேவை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago