2025 ஜூலை 12, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பிலும் அச்சுறுத்தல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நிலமீட்புக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில், தொடர்சியாக பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், போராட்டம் நடைபெற்றுவரும் இராணுவ முகாமுக்குள் மக்கள் நுழையாதவாறு, வாசல்களில் முட்கம்பிகள் போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில், இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் விடுவிக்குமாறு, அக்காணிகளின்  உரிமையாளர்களால், கடந்த 2ஆம் திகதி முதல், தொடர்ச்சியான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அம்மக்கள், தாம் மேற்கொண்டுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கும் இந்த அரசாங்கம் தீர்க்கமான முடிவு வழங்காவிடின், இராணுவம் நிலைகொண்டுள்ள எமது காணிக்குள், அத்துமீறி நுழைவோம் என்றும், அவ்வாறு நுழையும் எங்களை, இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினாலும், எமது காணியில் விழுந்து உயிரை விடுவோம் என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு  முன்பாக நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்புப் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் வகையில், அங்கு பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .