2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம்: முறைப்பாடு செய்தும் நடவடிக்கை இல்லை

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“கிளிநொச்சி, அக்கராயனில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என, அக்கராயன் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள நீர்த்தாங்கியில் இருந்து, கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.

குடிநீர்த் தாங்கி, நீர்த் தொட்டிகள் திறந்தபடி இருப்பதன் காரணமாக குரங்குகள், பறவைகளின் எச்சம் நீருடன் கலப்பதாக, கிராம அலுவலர் ஊடாக, கரைச்சிப் பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு மக்கள் அறிவித்திருந்தனர்.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் வந்து பார்வையிட்டும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

750 குடும்பங்கள் உள்ள இக்கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .