Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில், மல்லாவி ஐயங்கன் குளம், புற்றுவெட்டு வான் ஊடாக கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு பயணிகள் போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்கள் கூட்டாக இணைந்து, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இது தொடர்பான தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அனுப்பி வைத்துள்ளனர்.
“முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவில், மிகவும் பின்தங்கிய கிராமங்களான ஜயங்கன் குளம், பழைய முறிகண்டி, புற்றுவெட்டு வான், தேறாங்கண்டல் ஆகிய கிராமங்களில் சுமார் 1200, மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து 07 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், இயல்பு வாழ்க்கைக்கு முல்லைத்தீவு திரும்பிவிட்டதாக கூறப்படுகிற போதும், பொதுப் போக்குவரத்துச் சேவை இல்லாத நிலையில், அவசர நோயாளர் தொடக்கம் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்பவர்கள் வரையில் அடர்ந்த காட்டுப் பாதை ஊடாக, அச்சத்துடன் கால்நடையாகவோ அல்லது மாட்டு வண்டிகளிலோ பயணிக்கும் அவல நிலை தொடர்கின்றது.
இங்கு கடமையாற்ற வரும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், ஏனைய அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் 13, 14, கிலோமீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்துச் சேவை இல்லாத காரணத்தால், 14 கிலோமீற்றர் தூரத்துக்கு நடந்துச்செல்ல வேண்டியுள்ளதுடன், இங்கு தரித்து நின்று சேவையில் ஈடுபடும் ஒரேயொரு முச்சக்கர வண்டிக்கு 800, ரூபாய் தொடக்கம் 1200 ரூபாய் வரை பணம் கொடுத்து பயணிக்க வேண்டும்.
எனவே, வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்குள் எங்கள் கிராமங்களுக்கு ஒரு முறை விஜம் செய்து, அவல நிலையை பார்க்க வேண்டும். அத்துடன், எமது பொதுத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும்” என, அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
12 minute ago
21 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago
2 hours ago