2025 ஜூலை 10, வியாழக்கிழமை

புதிய நிர்வாகம் கோரி ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2017 ஜனவரி 15 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தை நியமிக்குமாறு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம், வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று (15) காலை 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய், ஐந்து வருடம் கிராமத்தில் சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் கிராமத்தில உண்மை செயற்பாட்டாளர்களை புறக்கணிப்பது ஏன் போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய நிர்வாகத்தினர் கிராமத்தின் தேவைகளை அறிந்து கிராமத்தில் அபிவிருத்தி மேற்கொள்வதில்லை.

கிராமசேவையாளர் தமக்கு வேண்டியவர்களை மாத்திரம் நிர்வாகத்தில் உள்வாங்கி செயற்பட்டு வருகின்றார் இதனை நாங்கள் எதிர்க்கின்றோம் என தெரிவித்தனர்.

அத்துடன் தமது கிராமத்திலுள்ளவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளுமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

மேலும், புதிய நிர்வாகத்தினை மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் நாளை கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .