2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்தில் அமைச்சர் ரிஷாட்

Niroshini   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கேப்பாபுலவு - புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை  அதிகாரி  ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில், காணி விவகாரம் தொடர்பில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் உத்தரவு கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும், தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .