2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு குடியிருப்பு மக்கள் நடாத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, கேப்பாப்புலவு கிராம மக்கள் முழுமையாக ஒன்று திரண்டு சனிக்கிழமை (04) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பதாகைகளை ஏந்திய மக்கள், கேப்பாப்புலவு படையினர் முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக, ஊர்வலத்தினை நடாத்தியுள்ளனர்.

தமது காணிகளை, இலங்கையின் 69ஆவது சுதந்திர நாளில் படையினர் விடுவிக்க வேண்டும், என வலியுறுத்தியே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இதேவேளை கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

இப்போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவனேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .