2025 ஜூலை 12, சனிக்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்திக்கச் செல்வோரை அச்சுறுத்தும் வகையில், தொலைநோக்கி கருவி மற்றும் புகைப்பட கருவிகளைக் கொண்டு, இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

விமானப்படையின் ஆக்கிரமிப்பினால், தமது காணிகளை இழந்த முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதியில் அமைந்துள்ள விமானப்படை முகாமுக்கு முன்னால், கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு பகலாக இடைவிடாது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டத்துக்கு, பலரும் ஆதரவு வழங்கி கலந்துகொள்வதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கான இதர உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்வோரை அச்சுறுத்தும் அச்சுறுத்தும் வகையில், தொலைநோக்கிக் கருவிகள் மற்றும் புகைப்பட கருவிகளைக் கொண்டு, இராணுவத்தினர் படம் பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .