Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 22 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் இராணுவ முகாம் முன்பாக இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இராணுவத்தின் குடும்பங்கள், கேப்பாப்புலவு இராணுவ முகாமில் உல்லாச வாழ்க்கை நடாத்துகின்றனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான சி.சிவமோகன் தெரிவித்தார்.
கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலத்தினை விடுவிக்கக் கோரி, 22 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவ முகாமின் முன்புற வாசலிலே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், நாள்தோறும் ஐம்பது தொடக்கம் அறுபது வரையான கார்களில் வரும் இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர், முகாமில் உல்லாசமாக காலத்தினைக் கழிக்கின்றனர்.
கேப்பாப்புலவு மக்கள் கடற்றொழில் புரிய வேண்டிய இடத்தில் இராணுவத்தினர் தடை விதித்து, கடல் உணவுகளை இராணுவத்தினர் தமது குடும்பங்களுடன் உண்டு காலத்தினைக் கழிக்கின்றனர். ஆனால், கேப்பாப்புலவு பூர்வீக மக்கள், தமது காணியினை விடுவிக்குமாறு வெயிலிலும் மழையிலும், பனியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடன் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினோம். ஆனால், கேப்பாப்புலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தீர்க்கமான பதில் ஒன்றும் எனக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்படாத வாக்குறுதிகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மக்களிடம் வாக்குறுதிகளாக என்னால் வழங்க முடியாது. ஆனால், கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, 'நல்லாட்சி அரசாங்கம்' என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago