2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போராளிகளும் இலங்கை இராணுவச் சிப்பாய்களும் இணைய வேண்டும்

Niroshini   / 2016 மே 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் இலங்கை  இராணுவச் சிப்பாய்களும் ஒன்றிணைவதே தனது எதிர்பார்ப்பாகும்' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மேலும், 'சிங்கள இராணுவத்துடன் முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர்களும் இணைந்துகொள்ள வேண்டும்' என்றும் அவர் குறிப்பட்டார்.

கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையம் ஏற்பாடு செய்த வெசாக் தின நிகழ்வு சனிக்கிழமை(21) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கால்நடைகளை வழங்கி வைத்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புத்த பெருமான் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் இன, மத.மொழி வேறுபாடு இன்றி சமாதான வாழ வேண்டும் என்பதையே போதித்துள்ளார். இந்த புண்ணிய நாளில் இங்கு கூடியிருக்கின்ற எல்லோரும் ஒன்றாக இணைந்து நல்லதொரு புண்ணியம் தரக்கூடிய வேலையை செய்திருக்கின்றோம்.

யுத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த பசுமாடுகளை அவர்களுக்கு வழங்கி அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை உயர்த்தியுள்ளோம்.

இந்து மதத்தவரை பொறுத்தவரையில், பசு அவர்களின் தெய்வம்ரூபம். சிவபெருமான் கடவுளின் வாகனம். எனவே, பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதனை தடை செய்யுமாறு இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதனையே நானும் விரும்புகின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .