Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 05 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'எமது தேசிய விடுதலையை அடைய போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வகுப்பு வாதங்களுக்குள் சிக்கிக்கொண்டால் தமிழின விடுதலை உணர்வுகொண்டு போராடி உயிர்நீத்த ஒவ்வொருவரையும் அது கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வவுனியா மாவட்டத்துக்குரிய பொருளாதார மத்திய நிலையம், 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டுக்குரியது. அதை எப்படி பிரயோசனப்படுத்துவது என்பது பற்றி சிந்திக்கவேண்டிய நாம், வகுப்பு வாதங்களுக்குள் சிக்கிவிடுவோம் எனின், அபிவிருத்தியையும் இழந்து எமது விடுதலை உணர்வையும் எம்மை அறியாமலேயே சிதைத்து விடுவோம்' என்றார்.
'பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமையுமெனின், அதன் பிரயோசனம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய அனைத்து மாவட்ட விவசாயிகளும் நன்மையடைய வேண்டும். வடமாகாணத்துக்குரிய அபிவிருத்தியை சிறுமைப்படுத்தி, வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குள் மட்டும் வகுப்பு வாதத்துக்குள் மக்கள் சிக்கி விடுவதால், எதனையும் சாதித்துவிடப் போவதில்லை.
எனவே, உலகமயமாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தியை, உலகம் எதிர்கொள்ளும் போது, தமிழர்களாகிய நாம், அறிவியல் ரீதியாக சிந்தித்து செயல்படுவதே பொருத்தமானதாக அமையும்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago