Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 04 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
இப்தார் பெருநாள் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் இடம்பெறவில்லையென வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கூட்டங்கள் நடைபெறவில்லை. ஏன் இக்கூட்டங்கள் நடைபெறவில்லையென மருத்துவர் சி.சிவமோகனிடம் கேட்டபோது, 'இப்தார் நிகழ்வு காரணமாக இணைத்தலைவர்களில் இருவர் கலந்துகொள்ள முடியாததன் காரணமாகவே இக்கூட்டங்கள் நடைபெறவில்லை. இருவாரங்களுக்குள் இக்கூட்டங்களை நடத்தப்படும்' என்றார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மாவட்டத்தின் சகல விடயங்களையும் ஆராய முடியாமல் இருப்பதன் காரணமாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பிரச்சனைகள் ஆராயப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இலகுவாக நடத்தமுடியும்.
ஆனால் ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இவ்வாண்டில் இரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையிலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இதுவரை நடைபெறவில்லை.
கடந்த மாதம் 02ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் ஜூன் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடாத்துவது தீர்மானிக்கப்பட்ட போதிலும் இக்கூட்டங்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago