2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம்

George   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் னைதுசெய்யப்பட்ட  சந்தேகநபர், பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது, தப்பிச் சென்றதையடுத்து, மூன்று பொலிஸார், தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “மன்னாரில் மன்னாரில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மன்னார் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவரை மன்னார் பொலிஸார், அண்மையில் கைது செய்தனர்.

குறித்தநபரை மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச் சென்று விசாரனைகளை முன்னெடுத்த போது, அவர் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

புதன்கிழமை காலை  சந்தேகநபரின் மனைவி பார்வையிட வந்த போது, பொலிஸார் பார்வையிட அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர், பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கைவிலங்கிடப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை பயனளிக்கவில்லை.

சந்தேக நபர் தப்பிச் சென்ற நேரத்தில், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று பொலிஸார், அதனையடுத்து,  தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .