2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்தவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக கொடுத்த உடுவில் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு சட்டவிரோதமாக வாகனமொன்றில் ஆறு பசுக்களை  கொண்டுச் சென்ற நபர் இலுப்பையடி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் பசுக்களையும் பொலிஸார் மீட்டனர்.  

மல்லாகம் நீதிமன்றில் மேற்படி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து தவணை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

பொலிஸ் பொறுப்பதிகாரியை சந்திக்க வேண்டும் என கூறி புதன்கிழமை (21) பொலிஸ் நிலையத்துக்கு வந்த குறித்த நபர், அலுவலகத்தில் இருந்த பொறுப்பதிகாரியிடம் 6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக கொடுத்து மேற்படி வாகனத்தை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

உடனே ஏனைய பொலிஸ் அதிகாரிகளை அழைத்த பொறுப்பதிகாரி குறித்த நபரை கைது செய்ய உத்தரவிட்டார். அத்துடன் சான்றுப்பொருளாக பணத்தை கைப்பற்றிய பொலிஸார், அதனை வியாழக்கிழமை (22) நீதிமன்றில் பாரப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .