Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 ஜூன் 13 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொள்ளும் சில செயற்பாட்டினால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த போக்குவரத்து பொலிஸாரின் தேவையும் கடமையும் அவசியமானது. ஆனால், வவுனியாவில் இரவு, மாலை வேளைகளில் உள் வீதிகளில் காணப்படும் அபாயம் மிக்க வளைவுகள் மற்றும் வாகனம் நிறுத்த முடியாத குறியீடுகள் போடப்பட்டுள்ள இடங்களில் மறைந்திருக்கும் போக்குவரத்து பொலிஸார் திடீரென பாய்ந்து வாகனங்களை மறிப்பதுடன் சாரதிகளுடன் கடும் போக்கிலும் செயற்பட முற்படுகின்றனர்.
இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அபாயமிக்க பகுதிகளில் திடீரென நிறுத்தப்படும் வாகனத்துடன் மோதி விபத்துக்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இது தவிர, சாரதிகள் மது போதையில் வருகிறார்களா என்பதை அறிய வாய் பகுதியை மணந்து பார்ப்பதற்காக மேற்கொள்ளும் சில செயற்பாடுகள் கூட அசௌகரியத்ரைத ஏற்படுத்துவதாக சாரதிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அண்மையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வாயை போக்குவரத்து பொலிஸார் மணந்த போது ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞன் ஒருவர்மீது போக்குவரத்து பொலிஸார் தாக்குதல் நடத்தியமையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைபாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago