2025 ஜூலை 12, சனிக்கிழமை

பொலிஸாரின் வாகனம் பாடசாலையில் கையளிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப கற்கை நெறியை மேற்கொள்ளும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக, வவுனியா பொலிஸாரினால், சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனமொன்று, இன்று கையளிக்கப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப துறையில் கற்கும் மாணவர்கள், தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வாகனம் ஒன்று இல்லாது பெரும் சிரமப்பட்டிருந்தனர். இந்நிலையில், பாடசாலை அதிபர் மற்றும் பழைய மணவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால், மேற்படி வாகனம் கையளிக்கப்பட்டது.

இயங்கு நிலையில் உள்ள இந்த வாகனம், தற்போதைய பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாய் ஆகும் என, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் க.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி குமாரசிங்க, போக்குவரத்துப் பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் அனுர சாந்த, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .