2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு

George   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு தொடர்ந்தும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கோப்பபுலவு, பிலவுக்குடியிருப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா இதனை தெரிவித்தார்.

18 ஆவது நாளாக மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் எதற்காக தொடர்ந்தும் அரசாங்கம்  இழுத்தடிப்பு செய்கின்றது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கொட்டும் பனியிலும், வெயிலும் போராட்டத்தை தொடர்வதோடு பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின்  தலைவர் அருட்தந்தை மங்களாராஜா உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மக்களை சந்தித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .