2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Kogilavani   / 2017 மார்ச் 08 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச் சந்தை வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக பிளேடீனா (NP-WD6384) இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கிள், இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், கரைச்சிப் பிரதேச சபையின் அனுமதியுடன், குறித்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராவில் பதிவாகியுள்ள காணொளி பெறப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .