2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?

George   / 2017 மார்ச் 03 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“எங்கள் கைகளால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?, எங்கே இருக்கிறார்கள்?, அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார்களா?, எதற்காக கொலை செய்தீர்கள்?, இந்த கேள்விகளுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களும், படையினரும் எமக்கு பதில் சொல்லவேண்டும். அந்த பதிலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எங்களுக்கு  பெற்று கொடுக்கவேண்டும்”என, கிளிநொச்சி கந்த சுவாமிஆலயம் முன்பாக கடந்த 12நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்,  கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிளிநொச்சியில் நடத்திவரும் தொடர்ப் போராட்டம், 12 ஆம் நாளகவும் இன்று தொடர்கின்றது.

“2009ம் ஆண்டு போர் நிறைவு கட்டத்தில் எங்க ளுடைய பிள்ளைகளை படையினரிடம் கையளித்தோம். அவ்வாறு கையளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவ்வாறு கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் குற்றவா ளிகள் என்றால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டணை பெற்றுகொடுத்திருக்கவேண்டும்.
அதனை செய்யாமல் நாங்கள் கையளித்த பிள்ளைகள், எங்களுடைய உறவுகள் எங்கே என்றே தெரியாது. என கூற இயலாது. அதுவும் ஒரு நாட்டின் படையினர் அந்த பதிலை வழங்க இயலாது. இதனையே கடந்த 8 வருடங்களாக இலங்கையின் ஆட்சியாளர்களிடமும், சர்வதேச நாடுகளிடமும் கேட்டு வருகின்றோம்.

ஆனால், அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் எந்த தடுப்பு முகாமில் அல்ல து எந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். என்பதை அரசாங்கம் கூறியே ஆகவேண்டும். இனிமேலும் பொறுமை காப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. அரசாங்கமும், இலங்கையின் ஆட்சியாளர்களும் எங்களுடைய கேள்விகளுக்கு தக்க பதிலை தரவேண்டும்” என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் கூறினர்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக காணமல் ஆக்கப்பட்ட தனது மக ன் தொடர்பாக யோ.கலா என்ற தாய் கூறுகையில், “எனது மகனை 2009.03.25ஆம் திகதி இறுதியாக, முள்ளிவாய்க்காலில் கண்டேன். பின்னர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண் டிருந்தபோது புல்மோட்டை வைத்தியசாலையில் எனது மகன் சிகிச்சை பெற்று வருவதாக எனது மகன் வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எனக்கு கூறியிருந்தார்.

அதன் பின்னர், 2015.07.07ஆம் திகதி வரை எனது மகன் தொடர்பாக பொலிஸாரும், புலனாய்வு பிரிவும் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியாக வந்தபோது எனது மகனுடைய அடையாள அட்டை இலக்கத்தை கேட்டு பெற்று கொண்டதுடன் எனது மகன் விரைவில் என்னிடம் வருவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் கூறினர்.

ஆகவே, எனது மகன் உயிருடன் இருக்கிறான். என்னுடைய மகன் மட்டுமல்ல இங்குள்ளவர்களின் உறவுகள் அனைவருமே உயிருடன் இருக்கிறார்கள். இருக்கவேண்டும். அந்த நம்பிக்கையிலேயே கடந்த 12 நாட்களாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றோம். இதற்கு ஆட்சியாளர்கள் தகுந்த பதிலைவழங்கவேண்டும். அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் பெற்று கொடுக்கவேண்டும். இல்லையேல் எமது சாவுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களும், படையினரும் மட்டுமல்லாமல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமும் பதில் சொல்லவேண்டும்” என்றார்.

இதேபோல், காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பாக ஆ.லீலாதேவி என்ற தாய் கூறுகையில், “2009.05.15ஈம் திகதி மதியம் 01.10 மணிக்கு என்னுடைய மகன் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து படையினரிடம் கையளிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் காணாமல் ஆக்கப்பட்டார். என்னுடைய மகன், படையினரிடம் கையளிக்கப்பட்டதற்கு என்னிடம் உயிருள்ள சாட்சி இருக்கின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்களிடம் அந்த சாட்சிகளை காட்டுவதற்கு நான் விரும்பவில்லை. பலர் என்னிடம் கேட்டார்கள். அந்த சாட்சியை கொண்டுவாருங்கள் என, ஆனால் நான் காட்டவில்லை. காட்ட விரும்பவுமில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் மட்டும் அந்த சாட்சியை முற்படுத்துவதற்கு விரும்புகிறேன். காரணம் இங்கே சாட்சிகளுக்கு பாதுகாப்பே இல்லை” என, கூறினார்.

இதேவேளை, தமது போராட்டம் தொடரும் எனவும் அரசாங்கம் தகுந்த பதிலை வழங்காமல் போனால் போராட்டம் வேறு வழிக்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டம் தொடர்பாக அரசாங்கத்துடள் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமாக காணி பிரச்சினை தொடர்பாக பேசியிருந்த போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் எங்களை எவ்வாறு தூக்கி எறிந்துவிட்டு நடந்து கொள்கின்றதோ, அதே போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது பிரச்சினைகள் தொடர்பாக கரிசினை கொள்ளாமல் நடப்பது மேலும் கவலை அழிக்கின்றது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .