Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
பாதுகாப்பு நிமித்தம் சூரிபுரம் கிராமத்துக்குச் சென்ற விமானப் படையினர் இருவர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த இரண்டு விமானப் படையினரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சூரிபுரம் கிராமத்துக்கு பாதுகாப்பு நிமித்தம் சென்றபோது, அங்கு கூடி நின்ற இளைஞர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாய்த்தர்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது, 2 விமானப் படையினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, விமானப் படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவரை, முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்களை இன்று (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
25 minute ago