Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள விவசாய நிலங்கள் மற்றும் சிறிய குளங்களை விடுவித்து தரவேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னர் மக்கள் குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ளபோதும் மக்களின் வாழ்வாதார பயிர்ச்செய்கை நிலங்கள் பல இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதி மக்களுக்குச் சொந்தமான 18 க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் அதன் கீழான 2,000 ஏக்கர் வரையான விவசாய நிலங்கள் மகாவலித்திட்டத்தின் கீழ் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மக்கள் பயிர் செய்கைகளுக்குரியதாக்கியுள்ளனரென பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள அம்பகாமம் கருப்பட்டமுறிப்பு ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் தொடர்ந்தும் படையினர் வசமுள்ளன.
அத்துடன் அம்பகாமம், முறிகண்டி, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட சிறிய விவசாய குளங்கள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து வருகின்றனவெனவும் சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள், இவற்றை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, வடமாகாணத்தில் அதிகளவான நிலப்பரப்பை படையினர் கையகப்படுத்தியுள்ள மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில், அம்பகாமம் பகுதியில் 8,500 ஏக்கர் வனப்பகுதியும் கருப்பட்டமுறிப்பு முதல் இரணைமடுக்குளம் வரையுமான 3,500 ஏக்கர் வனப்பகுதியும், கேப்பாப்புலவுப்பகுதியில் 2,500 ஏக்கரும், கொக்குளாய் பிரதேசத்தில் 520 ஏக்கரும் கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம், அமைதிபுரம் ஆகிய பகுதிகளில் தலா 50 ஏக்கரும் தேறாங்கண்டல் பகுதியில் 120 ஏக்கருமென, சுமார் 16 ஆயிரத்து 720 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் படையினர் வசமுள்ளதாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
38 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago