Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளமை ஏற்றதல்ல என்று தெரிவித்த வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், இதனை நிறுத்த தன்னாலான முயற்சியை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை உறுதிப்படுத்தும் முகமாக அவரிடம் செவ்வாய்க்கிழமை (15) வினவியபோதே, மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இந்த இடமாற்றம் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுவதாகும். எனினும் பெரிய வைத்தியசாலைகளுக்கு சிரேஸ்ட மருத்துவ நிர்வாகத்துறையைச் சேர்ந்தவர்களே, நியமிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இந்த இடமாற்றம் மிகப்பெரிய இழப்பாகும்.
எனினும் இந்த இடமாற்றத்தை நிறுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர்களுடன் கலந்துரையாடுவேன் என்பதுடன் சுகாதார அமைச்சருக்கும் எடுத்துக்கூறுவேன் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
1 hours ago