Freelancer / 2022 ஜூன் 17 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மற்றும் டீசலை மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டு நேற்று இரவு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (16) இரவு குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த எரிபொருள் நிலையத்தில் பெற்றோல், டீசல் மற்றும் சுப்பர் பெற்றோல் பதுக்கி வைக்கப் பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.
பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குறித்த எரிபொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (R)
32 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago