Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 18 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்ரமணியன் பாஸ்கரன்
கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் தங்கியுள்ள தமக்கு, காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக்கோரி, கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளுப்பட்டுவந்த கவனயீர்ப்புப் போராட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
காணி உரிமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிராமசேவகர் மற்றும் மதகுரு ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கான காணி மற்றும் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்தே, குறித்த போராட்டத்தினை மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் கீழ் பயிரிச்செய்கைக்கென தனிஒருவருக்கு வழங்கப்பட்ட காணியில், காணி உரிமையாளர் இல்லாத நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அக் காணியில் குடியேறி, நீண்டகாலமாக வசித்து வந்தார்கள்.
இந்நிலையில், தாம் வசித்து வரும் காணிகளுக்கு காணி ஆவணங்களையும், வீட்டுத்திட்டங்களையும் பெற்றுத்தருமாறு கோரி, கடந்த 15 நாட்களாக அம் மக்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தனியாருக்குச் சொந்தமாக காணி என்பதால், காணி உரிமையாளரே காணிகளை நன்கொடையாக வழங்கினால் மட்டுமே, வீட்டுத்திட்டம் உட்பட ஏனைய உதவிகளை வழங்க முடியுமென, மாவட்ட அரசாங்க அதிபர், ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த காணி உரிமையாளருடன் மாவட்ட அரசாங்க அதிபர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடியதை அடுத்து, குறித்த காணியை அம் மக்களுக்கே வழங்குவதற்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், யோகர் சுவாமி என் ற பெயரில் அங்கு குடியிறுப்பை அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனை, குறித்த பகுதி மக்கள் ஏற்றுக் கொண்டதுடன் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago