2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு விழா

Gavitha   / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலத்தின் பரிசளிப்பு விழா, நேற்று திங்கட்கிழமை (09) பிற்பகல் 2.30 மணியளவில்,  பாடசாலையின் அதிபர் திருமதி ரி.எஸ்.கிறிஸ்ரின் குரூஸ் தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த ஆரம்பப் பாடசாலையில், 70 மாணவர்களுக்கு 2014ஆம் ஆண்டுக்கான பாடம் தொடர்பானதும்; இணைபாட விதான செயல்பாட்டுக்குமான பரிசளிப்பு விழாவாக இவ்விழா இடம்பெற்றது.

அத்துடன் நடப்பாண்டான 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்களும் இவ்விழாவின் போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற  குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  மற்றும் விசேட விருந்தினராக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியாம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலா நிதி ஞா.குணசீலன், சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .