2025 ஜூலை 05, சனிக்கிழமை

பழையமுறிகண்டி வீதி பகுதியளவில் புனரமைக்கப்படுகின்றது

Princiya Dixci   / 2016 ஜூலை 06 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இராமநாதபுரம் பழையமுறிகண்டி பகுதியின் 900 மீற்றர் வீதி ஆறு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம், புதுக்காடு ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதியாகவும் இராமநாதபுரம் மகா  வித்தியாலயம், தபாலகம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் பிரதான வீதியாகக் காணப்படும் புதுக்காடு முதல் வட்டக்கச்சி வரைக்குமான பழைய கண்டிவீதி புனரமைக்கப்படாமல் காணப்பட்டதால் இதனூடாகப் பயணிக்கும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இவ்வீதியினைப் புனரமைத்து த்தருமாறு இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆறு மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீதியின் ஒரு பகுதியான பாடசாலை, தபாலகம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு முன்பாகவுள்ள 900 மீற்றர் வரையான பகுதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .