2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பஸ் சேவை ஒழுங்கில்லை

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கின் அம்பாள்புரம், வன்னி விளாங்குளம் ஊடாக நடத்தப்படும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சேவை ஒழுங்கின்றி இருப்பதாக, இப்பகுதி பொது அமைப்புகளினால் தெரிவிக்கப்படுகின்றன.

மாந்தைகிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பவற்றில் இப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்படி கிராமங்களின் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வரக் கூடிய வகையில் பஸ் சேவைகள் இடம்பெற வேண்டும்.

குறிப்பாக மாங்குளத்தில் இருந்து மாந்தை கிழக்கிற்கான இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் அதிகமாக இடம்பெற வேண்டும். பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக வன்னிவிளாங்குளம், அம்பாள்புரம் கிராமங்களின் மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்றே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எனவே பஸ் சேவைகள் இடம்பெறவேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் இடம்பெற்ற போதிலும் ஒழுங்காக பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் இரு மாதங்களுக்கு முன்னர் மாங்குளத்தில் பஸ் நிலையம் ஒன்றினை அமைப்பதன் மூலம் மாந்தை கிழக்கு, துணுக்காய் பகுதிகளுக்கான போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .