2025 ஜூலை 12, சனிக்கிழமை

பஸ் விபத்தில் நால்வர் காயம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 22 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தசவசீலன்

முல்லைத்தீவு - புளியங்குளம் பிரதான வீதியில் கோடாலிக்கல்லு பிரதேசத்தில் இன்று (22) காலை 8.30க்கு இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, நெடுங்கேணி பிரதேசத்துக்கு அண்மையாகவுள்ள கோடாலிக்கல்லு பிரதேசத்திலுள்ள வளைவொன்றில் வேககட்டுப்பாட்டை இழந்து,   அருகிலிருந்த பனைமரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

வவுனியாவில் நடைபெறவுள்ள விவசாயத்திணைக்களத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, முல்லைத்தீவிலிருந்து சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்கள்.

விபத்தின் போது பஸ்ஸில் 20க்கும் மேற்ப்பட்டோர்  பயணம் செய்த நிலையில்  நடத்துநர் உட்பட நால்வர்  காயமடைந்ததோடு, ஏனையோர் எந்தவித காயங்களுமின்றி தப்பியுள்ளனர். பஸ்ஸின் ஒருபகுதி முற்றாகச் சிதைவடைந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .