2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவன் துஷ்பிரயோகம்: விசாரணைகள் ஆரம்பம்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஜூலை 12 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு - புத்துவெட்டுவானில், பாடசாலை மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதேச செயலகமூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தெரிவித்தார்.

ஐயன்கன்குளம் பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிராமத்தில் பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, பால் கொண்டு செல்லும் வாகனத்தில் குறித்த மாணவன் பாடசாலைக்குச் சென்றுள்ளான். இதன்போது, பால் வாகன ஓட்டுநரால், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளான் என்று தெரிவிக்கப்படுகிறது.

அம்மாணவன், இரண்டு நாட்களாக பாடசாலைக்கு வருகை தராததால், பாடசாலை நிர்வாகத்தினர், மாணவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்துள்ளனர். இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கும் குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .