2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாம்பு தீண்டி உயிரிழந்த விவசாயி

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் பாம்பு  தீண்டி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

மூங்கிலாறு தெற்கு  உடையார் கட்டினை சேர்ந்தி 46 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் வினோதீபன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூங்கிலாறு பகுதியில் நெல் அறுவடைக்கு சென்றவேளை அரவம் தீண்டியுள்ளது.

இதன்போது விவசாயி மயங்கி வீழ்ந்த நிலையில் மூங்கிலாறு  மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X