2025 ஜூலை 10, வியாழக்கிழமை

’பிரச்சினையைத் தீர்க்கும் துணிவு சிங்கள மக்களிடமிருந்து வர வேண்டும்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் துணிவு சிங்கள மக்களிடமிருந்து வர வேண்டுமென மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தறிதல் நிகழ்விலேயே, மேற்படி கருத்தை மதத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த நிகழ்வு, கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று  (11) மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மதத் தலைவர்கள்,

“நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்களின் எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனங்களினுடைய பிரச்சுனைகளைத் தீர்க்கின்ற துணிவு சிங்கள மக்களிடமிருந்தே வரவேண்டும். அவர்களே தமிழ் மக்கள் மீது ஒடுக்கு முறைகளை பிரயோகிக்கின்றார்கள். ஒற்றையாட்சி என்பது ஆபத்தானதொரு பதம். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வடக்கு கிழக்கு இணைந்த தீர்வே தேவையானது. இடைக்கால அறிக்கையில் தெளிவற்ற தன்மைகள் பூடகமாக காணப்படுகின்றன” எனக் கூறினர்.

குறித்த நிகழ்வில், மதத் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .