Niroshini / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - முழங்காவில் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரும் பூநகரி பிரதேச சபை உறுப்பினருமான சி.சிறிரஞ்சனை எதிர்வரும் 8ஆம் திகதியன்று, கிளிநொச்சி பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனையும், நாளை மறுதினம் (07) கிளிநொச்சி பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு 4ஆம் மாடியிலும் கிளிநொச்சியிலும் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்து நீண்டநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில், பச்சிலைப்பள்ளி சபை தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago