Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், கடந்த 32 வருடங்களாக அரச சேவையாற்றிய நிலையில், அவர் கடந்த 3ஆம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ளும் நிலையில், அவருக்கான பிரியாவிடை நிகழ்வை நடாத்த, சக ஊழியர்களுக்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அனுமதி மறுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரைச் சேர்ந்த பி.விஜயகுமார் என்பவர், கடந்த 32 வருடங்களாக, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி கடந்த 3ஆம் திகதி ஒய்வு பெற்றுள்ளார்.
அவரது சேவையைப் பாராட்டும் வகையில், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் இணைந்து சேவை நலன் பாராட்டு, பிரியாவிடை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும், குறித்த நிகழ்வுகளுக்கான அனுமதியை, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் கோரியிருந்த போதும், குறித்த நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி, அனைவரும் கையொப்பமிட்டு நேற்று (05) அனுப்பி வைத்துள்ளனர்.
ஓய்வு பெற்றுள்ள கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும், தற்போது புதிதாக நியமனம் பெற்றுள்ள கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் இடையில் ஏற்கெனவே இடம்பெற்ற கருத்து முரண்பாடு காரணமாகவே, இந்த நிகழ்வுக்கான அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
45 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
1 hours ago