2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புடைவைக் கடை தீக்கிரை

Editorial   / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல புடைவைக் கடை ஒன்றில் இன்று(01) காலை 8.30 மணியளவில் பரவிய தீ சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடையின் இரண்டாம் தளத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளதுடன் வவுனியா நகர சபையினர் மற்றும் பொலிசார் இணைந்து சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X