Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
“செவட்ட செவன” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நேற்று (06) கிளிநொச்சியில் நாட்டப்பட்டது. குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் புதிய வீட்டு தொகுதிகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 82 வீடுகளிற்கும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 59 வீடுகளிற்கும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 12 வீடுகளுக்காமான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த வீடுகளுக்கான அடிக்கல்லினை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டிவைத்தார்.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் முறிப்பு பகுதியில் 12 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் எம்.பி விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், விடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், வீடமைப்பு திட்டத்தின் கீழ் 5,000 மேற்பட்ட வீடுகளை அமைத்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் கடந்த கால அரசாங்கம் எதை செய்தது. வெறுமனே வீதியை போட்டார்கள், புகையிரதத்தை வரச்செய்தார்கள், யாழ்ப்பாணத்தில் கொட்டல் ஒன்றை அமைத்தார்கள். அது இப்போது பயன்பாடு இல்லாது உள்ளது. அத்துடன் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களளுக்கு எதையும் அவர்கள் செய்யவில்லை. கடந்த அரசாங்கத்தின் காலத்தில், கிறிஸ் பூதம் என பல்வேறு தொல்லைகள் ஏற்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அவற்றுக்கு சாதகமானச் சூழல் இல்லாமையால் வாள்வெட்டுகள் ஊடாக மக்களுக்கு தொந்தரவுகளை கொடுக்கின்றனர் என குறிப்பிட்டார்.
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago