Freelancer / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரின் தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முக்கிய பொருட்கள் என்பன தேடப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குரவில் பகுதியில் குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வசித்துவரும் நிலையில், போருக்கு முன்னர் குறித்த காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது வேறு ஒரு நபரினால் காணி பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
குறித்த காணியில் தோண்டும் நடவடிக்கைக்கான அனுமதியினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ள நிலையில் கிராம அலுவலகர், மருத்துவபிரிவினர், பொலிஸார், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணியில் மூன்று வேறு இடங்களில் நிலத்தில் தோண்டப்பட்டபோதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுபணி மாலை 4.30 மணியவில் முடிவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். (R)

42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago