2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - சாம்பல் தோட்டத்தில், இன்று (20) காலை 11.30 மணியளவில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வவுனியா - நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தியாகராசா நகுலேஸ்வரி (வயது 46) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர், கிணற்றுக்கு அருகே நின்றுள்ளார். பின்னர் அவரைக் காணவில்லை. தாயைக் காணவில்லை என அவரின் பிள்ளைகள் தேடிய சமயத்தில், அவர் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். 

பின்னர் அயலவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டுடெடுத்து, பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. 

குறித்த பெண், மனநலம் பாதிப்படைந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .